Pages

Wednesday, 20 February 2013

திருக்குறள் 

அன்பான மாணவர்களே நீங்கள் பின்வரும் திருக்குறளைப் படித்துவிட்டு அதன் பொருளை தாளில் எழுதி என்னிடம் கொடுக்கவும். 




1. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே                   
                                                          நாவினால் சுட்ட புண். 
                                                                                                                                   (குறள் எண் 129)

2. இயற்றலும் ஈடடலும் காத்தலும்  காத்த 
    வகுத்தலும் வல்லது அரசு.
                                                             (குறள் 385) 

3. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
    ஏழுமையும் ஏமாப்படைத்து
                                                             ( குறள் 398)

4. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட புண்.
                                                             ( குறள் 129)





  • பாரதியார் தமிழ் கவிதை உலகில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இவரின் கவிதைகளைப் படிப்பது இன்பம். கட்டுரைகளில் பாராதியாரின் கவிதைகளை மேற்கோளாக் காட்டுவது அதிக மதிப்பெண்களைப் பெற வழி வகுக்கும். 
மகாகவி பாரதியார்.


அ. நாட்டு வணக்கம் 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே / அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள்  வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே......
                                                  இக்கவிதையை நாம் நாட்டுப் பற்றிய கட்டுரைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். 


ஆ. அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
                                                             இக்கவிதையை உள்ள உறுதி வேண்டும் என்ற இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

இ.மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இடினமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கி பொருள் கைப்பட வேண்டும்
                                                                             இக்கவிதையை மன உறுதிக்கும், இனிய சொற்களைப் பேச வேண்டும் என்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 




Friday, 25 January 2013

கட்டுரை

அன்புள்ள மாணவர்களே,

நீங்கள் பின்வரும் குறிப்புகளை படித்து விட்டு கட்டுரை ஒன்று எழுதவும்.



கட்டுரை 1
உழைப்பில் வாரா உறுதிகள் உளவோ?
1. கைகளைப் போல் ஒரு நண்பன் இல்லை
·        கால்களைப் போல் ஒரு தொண்டன் இல்லை
·        உழைப்பது போல் ஒரு இன்பம் இல்லை
·        உண்மை இதை மறப்பதால் வாழ்வே இல்லை

உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

திருக்குறள்
ஊக்கமுடைமை

 பாரதியின்தேடிச் சோறு

·        ஓடியாடிப் பார்த்தல்,
·        வெட்டிப் பேச்சு,
·        கிள்ளுக் கீரை,
·        அறக்க பறக்க,
·        மீகாமன் இல்லா மரக்கலம் ஓடா
·        அள்ளிக் கொட்டி
·        உயிர்விட்டு
·        கரையேறுதல்
·        முயற்கொம்பு
·        கல்விகேள்வி
·        சொத்து சுகம்
·        விழலுக்கு இறைத்த நீர் போல

2.     எண்ணங்கள் சில எடுத்துக்காட்டுகள் எழுதலாம்.
3.     உழைப்பால் உயர்ந்த மனிதர்கள் எடுத்துக்காட்டுகள்
4.     அறிவியல் கண்டுபிடிப்பும் உழைப்பின் பயன்களே
5.     இன்றைய நவீன உலகமே உழைப்பால் உருவானதே
6.     இன்றைய மனிதர்களின் உழைப்பு
இருவகைப்பட்டது 1. உடலுழைப்பு
 2. மூளையுழைப்பு
8. மற்றவகை உழைப்புகள்
1.
கல்விக்கு உழைப்பு அதனால் பெரும் நன்மை
                                  2. பொருளீட்ட உழைப்பு அதன் பயன்கள்
3.
வாழ்வு மேம்பட உழைப்பு

9.     அடிமைகள் உழைப்பால்தான் அமெரிக்காவே செழித்தது.
10.   இந்திய மக்கள் உழைக்க தயங்குதல் / அதனால் ஏற்பட்ட இழப்பு.
11.   சொகுசு வாழ்வு / உழைக்க அஞ்சுதல் அதன் தீமைகள்.
முடிவுரை
          ஆகவேதான் உறுதியாக கூறலாம் …………………..